இரவில் வெகு நேரம் விழிக்கலாமா? –
இந்தப் பொன்மொழி அறிவியல் ரீதியாகவும் மனோதத்துவ ரீதியாகவும் தவறு என நிரூபித்துள்ளனர். இப்போது (2000 ஆம் ஆண்டில்)
டீன்-ஏஜ் வயதுக்காரர்கள் இரவு முழுவதும் படித்தோ அல்லது ஆட்டம் போட்டு, அரட்டை அடித்துவிட்டோ பகலில் கூடுதலாக கொஞ்ச நேரம் தூங்கி ஓய்வெடுக்கின்றனர். இவர்களின் மனநிலையை மனோதத்துவ நிபுணர்கள் ஆராய்ந்தனர். இவர்களுள் பெரும்பாலானவர்கள் எப்போதும் வெற்றியைப் பற்றிய சிந்தனையிலும், அதற்கான முயற்சிகளிலும் இருப்பது தெரிய வந்தது.
அதே போல இவர்களது அறிவுத் திறமையும் பரிசோதிக்கப்பட்டது. 24 மணி நேரம் லேசர் ஒளி விளக்கு நடனத்தில் கலந்து கொண்டாலும் வைகறையில் எழும் மனிதனைவிட படு அறிவுத்திறமை உள்ளவராகவே இவர்கள் ஒவ்வொருவரும் இருக்கின்றனர். ஆந்தைகள் இருட்டிலும் வெளிச்சத்திலும் விழிப்புடன் வாழ்வதைப் போல இவர்கள் வாழ்கிறார்களாம்.
காலையில் மிகத் தாமதமாக தங்கள் பணிகளை ஆரம்பிப்பவர்கள் விரைந்து முடிவெடுப்பவராகவும் நல்ல ஞாபக சக்தி உள்ளவராகவும் இருப்பதை, சிட்னி பல்கலைக்கழகமும் அமெரிக்க விமானப்படையும் கண்டுபிடித்துள்ளன. இசை மேதை மொசார்ட் நாள் முழுவதும் படுக்கையில்தான் இருந்தார். ஆனால், இவர் மகாத் திறமைசாலியாகவும் திகழ்ந்தார். தூக்கத்தைக் கெடுத்து அதிகாலையில் எழுபவர்கள் மனரீதியாக சோர்வாகவும் மறதி அதிகம் உள்ளவராகவும் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்க விமானப்படையில் புதிதாகச் சேர்ந்த 400 பேர்களின் தூக்க முறை, காலையில் எழும் நேரம் முதலியவை ஆராயப்பட்டன. அதற்குப் பிறகு அறிவின் சக்தி, நினைவாற்றல் முதலியன பற்றிக் கேள்விகள் கேட்கப்பட்டன. இதிலும் மேற்கூறிய முடிவுகளே வெளியாயின.
காலையில் தாமதமாக எழுந்து, இரவு தாமதமாகச் செல்லும் பழக்கம் உள்ளவர்களுடைய மனதின் வேகமும் ஞாபக சக்தியும் அபாரமாக உள்ளனவாம். சிட்னி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ரிச்சர்ட் ராபர்ட்ஸ், இரவு 7 மணிக்கு படுக்கச் சென்று காலை 4 மணிக்கு எழும் பழக்கம், பலநலன்களையும் கொடுக்கலாம். ஆனால், கண்டிப்பாக ஒருவரின் அறிவுத்திறனை வளர்க்கவே வளர்க்காது என்று உறுதிப்படக் கூறியுள்ளார்.
செள்ததாம்ப்டன் நகரில் உள்ள பல்கலைக்கழகமும் மற்றும் பொது மருத்துவமனையும் ஃப்ராங்க்ளினின் பொன்மொழி தவறு என நிரூபித்துள்ளது. 1,300 பேர்களின் செல்வ நிலை, உடல்நிலை ஆகியவற்றுடன் கேள்விகள் கேட்டு அவர்களின் அறிவுத்திறன் பரிசோதிக்கப்பட்டது. முடிவாக, ஃப்ராங்க்ளினின் கருத்துக்கு எதிராகவே உண்மை வெளியானது.
சில நாட்கள் இரவு வெகு நேரம் வேலை பார்த்தால் காலையில் கூடுதலாகக் தூங்க நேரம் ஒதுக்குங்கள். இதனால் எந்தக் கெடுதலும் நேராது.
காலை வெகுநேரம் வரை தூங்குபவர்கள் கவலைப்பட வேண்டாம். ஆனால் நீங்கள், நீண்ட நேரம் இரவில் விழித்திருந்து உழைப்பதும், செயல்படுவதும் மிக முக்கியம்.

Comments
Post a Comment